புத்தளம் மாநகர சபையின் சமூக அபிவிருத்தி மற்றும் சபை அலுவல்கள் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக இப்லால் அமீன் தெரிவு
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாநகர சபையின் சமூக அபிவிருத்தி மற்றும் சபை அலுவல்கள் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக கௌரவ உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் மாநகர சபையின் உறுப்பினர் இப்லால் அமீன் தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளார்
குறித்த குழுவின் ஊடாக தினச் சந்தை, வாராந்த சந்தை, முன்பள்ளிகள், நூலகங்கள், பூங்காக்கள், கலாச்சார நிகழ்வுகள், சன சமூக நிலையங்கள், விளையாட்டுத்துறை, தீயணைப்பு பிரிவு போன்ற சமூகத்தின் நலன் சார்ந்த விடயங்கள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது சபையினால் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஓ.அலிகான், சித்தி சலீமா, முஹம்மது ரிழ்வான், சஷிக, நிலங்கா தில்ருக்ஷி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
No comments