Breaking News

கற்பிட்டி இப்பன்தீவு பகுதியில் பூச்சிக்கொல்லி மற்றும் மசாலா பொருட்களுடன் இருவரை கைது செய்த கடற்படையினர்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி இப்பன்தீவு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மசாலா பொருட்களுடன் மீன்பிடி படகு ஒன்றையும் இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


இலங்கை கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பரப்பை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் கடல் வழியாக பொருட்களை கடத்துவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க தொடர்ச்சியாக ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


அதன்படி கற்பிட்டி இப்பன்தீவு கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய  தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மீன் பிடி படகொன்று கண்காணிக்கப் பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் அதில் சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஏழு பைகளில் பொதி செய்யப்பட்ட 12 கிலோகிராம் ஏலக்காய் , பூச்சிக்கொல்லி மருந்துகள் வல்லப் படகுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 35 வயதுடைய கற்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து வல்லப் படகு என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.











No comments