Breaking News

உடப்பு - ஆண்டிமுனை பாடசாலையில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர் கருத்தரங்கு

 (உடப்பு க.மகாதேவன்)

முன்பள்ளி கல்விக் கூடங்கள் பற்றிய புத்தளம் மாவட்ட கத்தரங்கு ஒன்று ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் (10)ந் திகதி இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ்ப்பிரிவு) திரு.எம்.கமலேந்திரன் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக கலாநிதி பாலசுப்பிரமணியம் தனபாலன், கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் திரு.நடராசா சச்சிதானந்தன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக  ஓய்வு நிலை பாட இணைப்பாளர் திரு.வி.அருணாகரன், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு.ந.பத்மானந்தன், திருமதி.ஆர். ஜெயந்தி (அதிபர்), கே.தர்ஷினி (அதிபர்), ஓம் சக்தி பாலர் பாடசாலை ஸ்தாபகர் திருமதி.வீ.கிருஷ்ணதேவி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதில் புத்தக வெளியீடு ஒன்றும் இடம்பெற்றது. இதனை முன்பள்ளி ஆசிரியைகளிடம் திரு.நடராசா சச்சிதானந்தன் வழங்கி வைத்தார்.













No comments