இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்த கடற்படை தளபதி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை புதன்கிழமை (09) விமானப்படையின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
இராணுவம் மரபுகளின் படி நடைபெற்ற இந்த முக்கிய உரிய சந்திப்பிற்காக விமானப்படை தலைமையகத்திற்குள் நுழைந்த கடற்படை தளபதிக்கு மிக உயர்ந்த இராணுவ மரியாதையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் இருதரப்பு முக்கிய துவம் வாய்ந்த மூலோபாய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையின் முக்கிய பங்களிப்பு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
சகோதர படைகளுக்கிடையிலான பிணைப்பு கௌரவமான ஒற்றுமை மற்றும் சேவை ஒத்துழைப்பை வலுப்படுத்திக் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கிடையில் நினைவு பரிசுகளும் பரிமாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments