புத்தளம்-குருணாகல் பிரதான வீதியில் ஆனமடுவ பிரதேசத்தில் விபத்து
(உடப்பு-க.மகாதேவன்)
புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள கன்னங்கரா சிங்கள மகா வித்தியாலயத்துக்கருகில் இன்று (5) சனிக்கிழமை வாகன விபத்து ஒன்றினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் கார் ஒன்று மற்றைய வாகனத்தை கடந்து செல்ல முற்பட்டபோது பின் பக்கமாக வந்த டிப்பர் லாரி மீது கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். வாகன சாரதிகளுக்கு சாதாரண காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments