புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றுக்கு புத்தளம் மாநகர சபை மேயர் மற்றும் மாநகர உறுப்பினர் விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றுக்கு புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம். ரின்சாத் அஹமத் மற்றும் மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீன் ஆகியோர் அண்மையிலே விஜயம் செய்தனர்.
பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் சரீனா பர்வீன் மற்றும் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை அதிபர் யூ.எல். முஹம்மது எஹியா ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமையவே, இவ்விருவரும் பாடசாலைகளுக்கு விஜயம் செய்தனர்.
இப்பாடசாலைகள் இரண்டும் தொடரான மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்குக்கு தொடராக பாதிக்கப்படுவது வழக்கமாகும்.
இதற்கான தீர்வாக மழை நீர் வழிந்தோடும் வடிகால் அமைப்பினை உருவாக்கும் திட்டம் தொடர்பில், மாநகர முதல்வரும், மாநகர சபை உறுப்பினரும் அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
No comments