Breaking News

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாநகர சபை அதிரடி நடவடிக்கை. புதருக்குள் ஒளிந்திருந்த கட்டடம் வெளியே தென்பட துவங்கியது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சவீவபுரத்தில் நீண்ட காலமாக கைவிடப்பட்டு புதருக்குள் மறைந்து பாழடைந்த நிலையில் காணப்பட்ட புத்தளம் மாநகர சபைக்கான கட்டடம் ஒன்று அதிரடியான செயற்பாடுகளின் மூலம் பொதுப்பொழிவு அடைந்திருக்கின்றது.


புத்தளம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் மாநகர சபைக்கு சொந்தமான கட்டடங்களை மீள் புணர் நிர்மாணம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டன.


தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர்  ரின்சாத் அஹ்மத் மற்றும் மாநகர உறுப்பினர்களான இப்லால் அமீன், ஆசிரியர் எச்.
எம்.சிபாக் ஆகியோர் அண்மையில் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்த கைவிடப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.


இதனையடுத்து இவர்களால் இனங்காணப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட புத்தளம் சவீவபுரம் வீடமைப்பு  திட்டத்தில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட கிளினிக் சென்டர் மற்றும் முன்பள்ளி நடைபெற்ற கட்டடமே ஓரிரு நாட்களில் உடனடியாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.


புத்தளம் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்திருக்கின்ற இந்த கட்டடத்தில் ஆரம்ப செயற்பாடாக மங்கி மறைந்து போயிருந்த பெயர் பலகையை
குறித்த பிரதேசத்தில் வதியும் இளம் தன்னார்வ தொண்டர்கள் புத்தளம் மாநகர சபையின் ஒத்துழைப்போடு புணரமைத்துள்ளனர்.


நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த இந்த கட்டடத்தை மீண்டும் உடனடியாகவே புனரமைப்பு செய்து தர முன் வந்த தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் மற்றும் குறித்த பிரதேசத்தின் மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீன் ஆகியோருக்கு புத்தளம் வாழ் பொதுமக்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.








No comments