கிரிக்கெட் துறையில் சாதித்த விருதோடை கிராம வீரருக்கு மகத்தான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எம்.யூ.எம்.சனூன்
வடமேல் மாகாண கிரிக்கெட் அணியில் இணைந்து சாதனை நிலை நாட்டிய புத்தளம் மதுரங்குளி விருதோடை கிராமத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.அஸீமுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
49 வது தேசிய கிரிக்கெட் போட்டியில் வடமேல் மாகாண (வயம்ப) அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த அணியில் விருதோடை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ.எம்.அஸீம் இணைந்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
கிரிக்கெட் வீரர் எம்.ஏ.எம்.அஸீம்
தனது விருதோடை கிராமத்திலும், அயல் கிராமங்களிலும் பிரபலமான அணிகளோடு இணைந்து சிறப்பான முறையில் தனது அபார திறமைகளை வெளிக்காட்டி விளையாடியதன் மூலம் அனைவரையும் கவர்ந்து வடமேல் மாகாண அணி சார்பில் விளையாடுவதற்கான வாய்ப்பினை பெற்றிருந்தார்.
இவர் தொடர்ந்தும் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி கிரிக்கெட் துறையில் சிகரம் எட்ட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் எனவும் விருதோடை ஐக்கிய இளைஞர் கழகம் (United Youth Club - Viruthodai) உள்ளிட்ட பொதுமக்களும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்
No comments