Breaking News

மருதமுனை ஸம் ஸம் வீதி கல்முனை மாநகர சபையினால் அபிவிருத்தி.!

(அஸ்லம் எஸ். மெளலானா)

நீண்ட காலமாக மோசமான நிலையில் காணப்பட்ட .மருதமுனை ஸம் ஸம் வீதி கல்முனை மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண சபையின் PSDG- 2025 திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1.5 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி கொங்க்ரீட் இடப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.


இப்புனரமைப்பு வேலைகள் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் மாநகர சபையின் பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது. 


இதனை மாநகர ஆணையாளர் நேற்றைய தினம் கள விஜயம் மேற்கொண்டு கண்காணிப்பு செய்திருந்தார்.


கிரவல் வீதியாக காணப்பட்டஇந்தப் பாதையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோக பரிசோதனைக் குழிகள் (Chamber) வீதியின் மட்டத்தில் இருந்து உயர்வாகக் காணப்பட்டதால் அவை போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்து வந்த நிலையில், இவ்வீதி கொங்க்ரீட் இடப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்டதன் மூலம் குறித்த நீண்ட காலப் பிரச்சினையும் சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments