Breaking News

தூய தேசத்திற்கான கட்சி – வண்ணாத்திவில்லுவில் வட்டார அமைப்பாளர்கள் நியமனம்

வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த சமூக செல்வாக்கும் அர்ப்பணிப்பும் கொண்ட நபர்கள், தூய தேசத்திற்கான கட்சியின் புதிய அரசியல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றுவதை உறுதி செய்யும் வகையில், வட்டார அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த காலங்களில் எந்த எதிர்பார்ப்புமின்றி தங்கள் நேரத்தையும், உழைப்பையும் அர்ப்பணித்து, “தூய தேசம்” என்ற கொள்கையை நெறியாக்கி, தேர்தல் பரப்புகளிலும், மக்களுக்கிடையிலான பணிகளிலும் உறுதுணையாக செயல்பட்டவர்களுக்கே அதிகாரப்பூர்வ நியமனக் கடிதங்கள் கட்சியினால் வழங்கப்பட்டது.


இந்த நியமனங்களை கட்சியின் வண்ணாத்திவில்லு பிரதேச அமைப்பாளராக பணியாற்றும் சகோதரர் அத்ஹான் தலைமையில், கட்சியின் பிரதி தலைவர் அப்துல் வாஜித் முஹம்மத் நஸீப், வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் நவ்பரா, செயற்குழு உறுப்பினர்களான ஆசாத் ஆசிரியர் மற்றும் அஸ்மல்கான் ஆகியோர் வழங்கியதோடு, நிகழ்வை சிறப்பித்தனர்.


கட்சியின் தலைவர், அமைப்பாளர்களின் பொறுப்புகள், இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் தெளிவுபடுத்தியதோடு, இந்த நிகழ்வை முழுமையாக திட்டமிட்டு, ஒழுங்காக நடத்தியதன் மூலம் கட்சியின் ஒழுங்கமைப்பு திறனை வெளிப்படுத்தினார்.


இந்த நியமன நிகழ்வு 2025 ஜூலை 25ஆம் திகதி, எலுவன்குளம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் புதுப் பாசறை அரசியலை ஊக்குவிக்கும் உரையாடல்களும், சமூக சேவையின் முக்கியத்துவம் பற்றிய ஆலோசனைகளும் இடம்பெற்றன.











No comments