முன்னாள் அமைச்சர் அலி சப்ரி - "திறமைக்கான குரல், நியாயத்திற்கான இடம்" அமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு
(ரிஹ்மி ஹக்கீம்)
முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் "திறமைக்கான குரல், நியாயத்திற்கான இடம்" அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (29) இடம்பெற்றது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரியின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் "திறமைக்கான குரல், நியாயத்திற்கான இடம்" அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.கியாஸ், பொதுச்செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் JP மற்றும் அமைப்பின் கல்வி மற்றும் உயர்கல்வி விவகார செயலாளர் எம்.கே.எம்.அதீப் AAT (Passed Finalist) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்..
No comments