சிலாபம் நஸ்ரியா, மத்திய கல்லூரியின் கால்பந்து வீரர்கள் தேசிய மட்டத்துக்கு தேர்வாகி, வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.
எம்.யூ.எம். சனூன்
பாடசாலைக்கான விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் சிலாபம் நஸ்ரியா, மத்திய கல்லூரியின் கால்பந்து வீரர்கள் தேசிய மட்டத்துக்கு தேர்வாகி, வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் 25 க்கும் மேற்பட்ட பாடசாலை அணிகளுடன் போட்டியிட்டே சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரி இந்த இலக்கை அடைந்துள்ளது.
வடமேல் மாகாணத்துக்கான இந்த போட்டிகள் யாவும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த தொடரில் இறுதிப் போட்டியில் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் அணியும் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரி அணியும் போட்டியிட்டதில் 03 : 01 என்ற கோல்களினால் நஸ்ரியா மத்திய கல்லூரி வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டது.
சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கின்ற இந்த பாடசாலை எந்த வித மைதானங்களும் இன்றி விளையாட்டுத் துறையில் திறமையை வெளிக்காட்ட கூடிய மாணவர்களாக காணப்படுகின்றனர்.
இந்த காற்பந்தாட்ட அணிக்கு பயிற்சி அளித்த மேனக சில்வா மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் நிலூட், மதுமாதவ, அதிபர், பிரதி அதிபர் ஆகியோருக்கு பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர் சார்பாக பாடசாலையின் முகாமைத்துவ குழுவினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
No comments