கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருதில் வீதி புனரமைப்பு.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கு எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள பிரதான தபாலக வடக்கு வீதி கல்முனை மாநகர சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் PSDG-2025 திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1.65 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி கொங்க்ரீட் இடப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்புனரமைப்பு வேலைகள் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் மாநகர சபையின் பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் குறித்த புனரமைப்பு வேலைகளை மாநகர ஆணையாளர் நேரடியாக சென்று கண்காணிப்பு செய்திருந்தார்.
இந்த வீதியை புனரமைப்பு செய்யுமாறு தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments