புத்/கனமூலை மு.ம.வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் பர்வீஸ் அக்தார் சாதனை.
கனமூலையைச் சேர்ந்த தொழிலதிபர் பஸ்மின் மற்றும் ஆசிரியை பர்ஸானா (கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம்) அவர்களது செல்வப் புதல்வன் எம். எப். பர்வீஸ் அக்தார் கா. பொ. த. (சா/த) பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9அண்ணா சித்தி பெற்று கனமூலை மு.ம. வித்தியாலயத்தில் 9A பெற்ற முதல் மாணவன் என்ற பெயரை பதித்துள்ளார்.
இவர் ஓய்வு பெற்ற அதிபர் சஹாப்தீன் ஆசிரியர் மற்றும் கனமூலை கிராமத்தின் முதல் பெண் ஆசிரியையான மர்ஹுமா அஸ்மா பீவீ அவர்களினதும் பேரப்பிள்ளை ஆவார்.
இதேவேளை இவரது இரு சகோதரிகளும் இதற்கு முன்னர் க.பொ. த. (சா/த) பரீட்சையில் 9A சித்திகளை பெற்று ஊருக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments