புத்தளம் பாலாவி புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டாவது தடவையாக பெறப்பட்ட 09 ஏ சித்திகள்.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் பாலாவி புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரண தரம் தோற்றிய மாணவர்களில் முஹம்மது யாசீர் பாத்திமா ஜெஸ்ரா 09 ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கும், புழுதிவயல் மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கின்றார்.
பாடசாலை வரலாற்றில் க.பொ.த.சாதாரண தர பரீட்சை ஒன்றில் இரண்டாவது தடவையாக இந்த 09 ஏ சித்திகள் பெறப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.எல்.எம்.ரிபாய்தீன் தெரிவித்துள்ளார்.
09 ஏ பெறுபேறுகளை பெற்ற பாத்திமா ஜெஸ்ரா, புழுதிவயலை சேர்ந்த ஆசிரியர் கே.ஐ.முஹம்மது யாசீர் (புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயம்) மற்றும் எம்.ஐ.ஜெஸ்மின் தம்பதிகளின் புதல்வியாவார்.
No comments