Breaking News

02 வெண்களப் பதக்கம் வென்றார் கல்முனை மாநகர வீரர் ஏ.எல்.ஆஷாத்.!

MASTER ATHLETICS CHAMPIONSHIP (SLMOAC) நடாத்தும் 38 ஆவது வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் எமது கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் படை உத்தியோகத்தர் ஏ.எல். ஆஷாத் அவர்கள் பங்குபற்றி ஈட்டி எறிதல் (JAVELIN THROW) போட்டியில் 3ஆம் இடத்தினையும்


சம்மட்டி வீசுதலில் (HAMMER THROW) 3ஆம் இடத்தினையும் பெற்று இரண்டு வெண்களப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டார்.


இப்போட்டிகள் நேற்றும் இன்றும் (05 & 06) தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கடந்த காலங்களிலும் இவர் பல தடவைகள் தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை வென்றிருந்தார்.


இவ்வாறு தொடர்ந்தேச்சியாக தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி, பதக்கங்களை வென்று குவிப்பதன் மூலம் கல்முனை மாநகர சபைக்கும் கல்முனைப் பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ள சகோதரர் ஏ.எல். ஆஷாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


-அஸ்லம் எஸ்.மௌலானா





No comments