புத்தளத்தில் தனிப்பட்ட ஒருவரின் கான் கழிவு நீரினால் துர்வாடை - மாநகர சபை, சுகாதார காரியாலயம் அசமந்தம் -
(புத்தளம் எம். டி.எப் நப்ரா)
புத்தளம் ஐந்தாம் குறுக்குத் தெருவில் தனிப்பட்ட ஒருவரின் வீட்டு கான் கழிவு நீர் வீதியின் ஓரத்தில் விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுப்புற சூழல் துர் வாடை வீசுவதுடன் அயலில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் இது விடயமாக புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் புத்தளம் மாநகர சபையின் சுகாதார பிரிவு என்பவற்றிற்கு எழுத்து மூலம் அறிவித்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அசமந்தமாக செயற்படுவதாக அப் பகுதி வாழ் மக்கள் அதிருப்த்தி தெரிவிக்கின்றனர்.
No comments