மதுரங்குளி கனமூலை கிராமத்தின் கல்விப் பெருமை முகம்மது அஷாம்
எம்.யூ.எம்.சனூன்
வெளியாகியுள்ள இலங்கை சிவில் சேவை போட்டிப் பரீட்சையின் நியமனப் பெயர் பட்டியலில் மதுரங்குளி கனமூலை மண்ணிலிருந்து அக்பர் அலி முகம்மது அஷாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் பாடசாலை ஆசிரியரான இவர், இலங்கை நிர்வாக சேவை (SLAS) இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) ஆகிய மூன்று பரீட்சைகளிலும் முதல் கட்டம் சித்தி அடைந்து, இரண்டாம் கட்டமாக இலங்கை திட்டமிடல் சேவை பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று இலங்கை திட்டமிடல் சேவைக்கு (Sri lanka planning Service) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று கல்வி புலத்தில் உயர் நிலை வகிக்கும் கொத்தாந்தீவு ஏ.சீ.எம்.நபீல் அவர்களுக்கு பின்னர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் பிரகாசித்த கனமூலை கிராமத்தின் மைந்தன் இவர் ஆகும்.
கனமூலை மண்ணின் வரலாற்றில் முயற்சி சாதனையின் மூலம் தடம் பதிக்கும் முதலாவது திட்டமிடல் அதிகாரி இவர் ஆவார்.
தனது ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்று, புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் உயர் தர கற்கையை தொடர்ந்தார்.
பட்டப்படிப்பை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
தனது கல்விச் சேவையை மதுரங்குளி மேர்ஸி கல்வி வளாகத்தில் ஆசிரியராக இணைந்ததன் மூலம் மாணவ சமூகத்திற்கு வழங்க ஆரம்பித்ததார்.
தனது கல்விப் பயணத்தில் பல்வேறு பொருளாதார, சமூக சவால்கள் இருந்த போதிலும் அவற்றை வெல்லும் மனதாரத்துடன் முஹம்மது அஸாம் பயணித்த விதம் இன்றைய இளைய தலைமுறைக்கு கனதியான பாடமாக அமைக்கிறது.
வசதியின்மை முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதில்லை என்பதை இவர் நிரூபித்து காட்டியுள்ளார். கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் மார்க்க அடிப்படைகளையும் பேணிய முன்மாதிரி மிக்க மனிதரான இவர் ஒவ்வொரு மாணவனுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார்.
முஹம்மது அஸாம் போன்று கனமூலை கிராமத்திலிருந்து மேலும் பலர் உருவாக வேண்டும் என்றால், பெற்றோர்களும் ஊர் தலைமைகளும் கல்விக்கு வழங்க வேண்டிய உரிய பங்களிப்பையும் இடத்தையும் வழங்க வேண்டும் என தெரிவித்த ஊரின் நலன் விரும்பிகள், இளைய சமுதாயம் தமது இலக்கை தெளிவாக அடையாளப்படுத்தி முயற்சிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு குடும்பமும் வழிகாட்ட பொறுப்பேற்ற தலைமைகளும் கல்வியை வாழ்க்கையின் அடித்தளமாகக் கருதி வளர்த்தல் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
முஹம்மது அஸாமின் இவ் அடைவானது வறுமையை வென்று உயரம் எட்ட முடியும் என்பதற்கான வாழும் சான்றாகும். இது கனமூலை கிராமத்தின் வரலாற்றில் ஒரு நம்பிக்கையின் விளக்காகக் கணிக்க முடியும்.
No comments