கற்பிட்டியில் முஸ்லிம் திடீர் மரண விசாரணை தெளிவூட்டல் நிகழ்வு!.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
நாட்டில் இடம்பெறும் திடீர் மரணங்களை விசாரணை செய்வதற்கென நீதி அமைச்சினால் திடீர் மரண விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் முஸ்லிம் மரணங்களின் போது 24 மணிநேரத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் முஸ்லிம் திடீர் மரண விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இது விடயமாக பொது மக்களுக்கு தெளிவின்மை காணப்படுகின்ற காரணங்களால் மரண விசாரணையாளருக்கும் மக்களுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றது. இது விடயமாக மக்களுக்கு தெளிவூட்டும்நிகழ்வு ஒன்று சனிக்கிழமை (17) கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளிவாசலில் பிற்பகல் 4.15 க்கு கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம் நாசீம் தலைமையில் இடம்பெற உள்ளது.
இந் நிகழ்விற்க்கு அனுபவம் வாய்ந்த திடீர் மரண விசாரணையாளர்கள் மற்றும் வளவாளர்கள் கலந்து கொள்ள உள்ளதுடன் இலங்கையின் திடீர் மரண விசாரணை சம்மந்தமான சட்டதிட்டங்கள், முஸ்லிம் திடீர் மரண விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டதன் நோக்கம், உடற்கூற்று செய்யப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் திடீர் மரண விசாரணையினால் மக்களுக்கும், சுகாதார திணைக்களத்திற்கும், நாட்டிற்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள் சம்மந்தமாக தெளிவூட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments