புத்தளம் தெற்கு கோட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டியில் சமீரகம முஸ்லிம் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
இம்முறை நடைபெற்ற புத்தளம் தெற்கு கோட்ட மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்யாலயம் 3 முதலாம் இடத்தினையும், 4 இரண்டாம் இடத்தினையும், 2 மூன்றாம் இடத்தினையும் பெற்று புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக பாடசாலயின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம் மிஹ்ழார் (நளீமி) தெரிவித்தார்.
இருபது வயது பிரிவில் ஏ.எம். அபீல் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றதுடன் 18 வயது பிரிவில் கரப்பந்தாட்ட ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும், எப்.எம் பாதீல் உயரம் பாய்தல் போட்டியில் முதலாம் இடத்தையும், எம்.எல்.எம். லம்ஹான் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், ரீ.என்.எம் மசீன் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும், 16 வயது பிரிவில் ஆண்கள் கரப்பந்தாட்ட அணி இரண்டாம் இடத்தையும், 12 வயது பிரிவில் எம்.ஆர் செயினப் உயரம் பாய்தல் போட்டியில் முதலாம் இடத்தையும், எப்.எம். அபான் நீளம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும், ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலையின் வரலாற்றில் சாதனை யை நிலைநாட்டி பெருமை சேர்த்துள்ளதுள்ளனர் எனவும் இம் மாணவர்களுக்கும் பயிற்சிகளை வழங்கிய விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களான எஸ்.எம்.எல். எம். இஹ்ஜாஸ், எம். சீ. சுலைமான், உப அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம் எம் மிஹ்ழார் ( நளீமி) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments