Breaking News

புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு தலைமையுடன் கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகியவற்றில் மரச் சின்னத்தில் ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளதோடு, நாத்தாண்டிய பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் தராசுஔ சின்னத்திலும் வெற்றி பெற்றுள்ளது.


இந்நிலையில் மேற்படி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைவது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது.



இக் கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், ரணீஸ் பதுறுதீன் (புத்தளம் மாநகர சபை உறுப்பினர்), எம்.எச்.எம்.ஹில்மி, கே.எம்.எம்.ரிழ்வான், ஏ.எஸ்.எம் .ரிழ்வான் மற்றும் எம்.றஸ்மி ஆகியோருடன் ஏ.ஆர்.எம் முஸம்மில்., சுவிஸ் பைசல் (கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரகள்) என முக்கியஸ்தர்கள் பங்கு பற்றி தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.










No comments