கற்பிட்டி அபிவிருத்தியின் முக்கிய பங்காளியாக என்றும் நிலைத்து நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - கற்பிட்டி பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் முஸம்மில் -
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அன்று தொடக்கம் கற்பிட்டி நகரின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியுள்ளது. என கற்பிட்டி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது ; கற்பிட்டி வைத்தியசாலைக்கான ஐந்து மாடி கட்டிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் எம் எச் எம் ஹில்மியின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர் பீட உறுப்பினருமான எஸ் எச் எம் நியாஸ் முயற்சியின் ஊடாக முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் பைசல் காசிம் மூலம் வழங்கப்பட்டது. எனவும்
மேலும் கற்பிட்டியில் தற்காலிகமாக பௌத்த மதஸ்தானத்தில் இடம்பெற்று வந்த கற்பிட்டி நீதிமன்ற செயற்பாடுகளுக்கான இன்றைய நிரந்தர நீதிமன்ற கட்டிடத்தையும் முன்னாள் நீதி அமைச்சராக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார் அத்தோடு கற்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தின் தேவைப்பாடு காணப்பட்ட நிலையில் தனியாரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த இடத்தை நீதிமன்றம் வரை சென்று பொது மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் என்பதனை இந்த தருணத்தில் தெரிவிப்பதாக குறிப்பிட்ட தலைமை வேட்பாளர் முஸம்மில்
இன்ஷா அல்லாஹ் இம்முறை இடம்பெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குதன் மூலம் கற்பிட்டியின் அபிவிருத்தி மேலோங்கி நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதாகவும் தெரிவித்தார்
No comments