கம்மந்தழுவ பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சுப்பர் கிங்ஸ் அணி சம்பியனாக மகுடம் சூடியது.
எம்.யூ.எம்.சனூன்
ஐந்தாவது முறையாக இடம்பெறும் கம்மந்தழுவ பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் அண்மையில் (16, 17) கம்மந்தழுவ இரு மொழி பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கம்மந்தழுவ ஊர் தழுவிய ரீதியில் பலம் பொருந்திய ஐந்து அணிகள் பங்கு பற்றிய கிரிக்கெட் விழாவில் சூப்பர் கிங்ஸ் மற்றும் பவர் ஹிட்டர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பவர் ஹிட்டர்ஸ் அணியினர் களத்தடுப்பை தெரிவு செய்து சுப்பர் கிங்ஸ் அணியை 4 ஓவர்களில் 51 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.
52 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய பவர் ஹிட்டர்ஸ் அணியினரை 4 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி எம்.எச்.எம். சரோத் தலைமையிலான சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொஹமட் முனீர் தெரிவு செய்யப்பட்டார்.
No comments