சேற்றில் மூழ்கிக்கிடந்த கல்முனை "வலயக்கல்வி அலுவலக வீதி" முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் கொங்கிறீட் வீதியாக மாறியது !
இலங்கையின் கல்வித்துறையில் முன்னேற்றகரமான பல சாதனைகளை தொடர்ந்தும் நிலைநாட்டி தேசிய ரீதியில் சிறந்த கல்வி வலயங்களில் ஒன்றான கல்முனை கல்வி வலயத்தின் பணிமனை அமைந்துள்ள "வலயக்கல்வி அலுவலக வீதி" பாவனைக்கு பொருத்தமற்றதாக காணப்பட்டதை கவனத்தில் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், நூற்றுக்கணக்கான அதிபர்களும், கல்வி அதிகாரிகளும் பயன்படுத்தும் இந்த வீதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டது. இந்த கல்முனை "வலயக்கல்வி அலுவலக வீதி" நிறைவுப்பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கல்முனை பிராந்திய கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கல்முனை கல்வி வலய கல்வி எழுச்சிக்கு முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
ஊடகப்பிரிவு
No comments