தம்புள்ள - குருநாகல் வீதியில் விபத்து - இருவர் மரணம்
(உடப்பு-க.மகாதேவன்)
தம்புள்ள - குருணாகல் வீதியில் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 30 மற்றும்,28 வயதுடைய கணவன், மனைவி என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயத்துக்குள்ளான தம்பதிகளின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர். கலேவெலயிலிருந்து குருணாகல் நோக்கிச் சென்ற உந்துருளி, வீதியைக் கடந்த நாய் மீது மோதியதில் வீதியின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும், கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததுடன் , சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments