Breaking News

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி மண்டலக்குடா வட்டாரத்தின் காரியாலயத் திறப்பு விழா

(எம் எஸ் எம் ஸகீர்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் மரச் சின்னத்தில்  போட்டியிடுகின்றது. இதன்படி கற்பிட்டி மண்டலக்குடா  வட்டாரத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடும் சுவிஸ் பைசல் மற்றும் மௌலவி றிப்கான் றஹ்மானி ஆகிய இருவரின் தேர்தல் பிரச்சார காரியாலயம் கட்சியின் உயர் பீட உறுப்பினர்  ஏ.எச் எம் பைரூஸினால் திறந்து வைக்கப்பட்டது.  


கற்பிட்டி பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மண்டலக்குடா வேட்பாளராக போட்டியிடும் எம்.ஏ. சுவிஸ் பைசல் தலைமையில். இடம்பெற்ற இக் காரியாலயத் திறப்பு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான எம் எச் எம் ஹில்மி மற்றும் கற்பிட்டி நகரில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள எம் எச் எம் சியாஜ், எம்.ஏ பைசல்,  எம்.டி றிப்கான் ( றஹ்மானி) ஆகியோருடன் முன்னாள் கற்பிட்டி பிரதேச உப தலைவர் எம்.என்.எம் பசீர் ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








No comments