கண்பார்வை அற்ற அல்குர்ஆனை மனனம் செய்த முகம்மது ராபிக் முகம்மது ஷிபான் அவர்களுக்கு பாராட்டு விழா...!
புதுக்குடியிருப்பு என். எம். ஹபீல் (கபூரி, JP)
புதுக்குடியிருப்பில் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் (மர்கஸ்) அஷ்ஷெய்க் அல்காரி ஸமீல் (ஷரபி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற நூருல் குர்ஆன் பகுதி நேர மத்ரஸாவில் அல்குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து முழு குர்ஆனையும் மனனம் செய்த கண்பார்வை அற்ற சகோதரர் முகம்மது ராபிக் முகம்மது ஷிபான் அவர்களுக்கு பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்குதல் நிகழ்வின் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
இதன்போது, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புளிச்சாக்குளம் பிராந்திய கிளை, புதுக்குடியிருப்பு அஸ்ஸபா பெளன்டேஷன் மற்றும் சிதார் உரிமையாளர் சகோதரர் மர்ஸுன் ஆகியோரால் நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் வழங்கி. கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அஷ்ஷெய்க், அல்ஹாபில், அல்காரி றியாஸ் தேவ்பந்தி (அதிபர் மன்பஉஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி) அவர்களால் புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டது.
No comments