அநுராதபுரத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
(உடப்பு க.மகாதேவன்)
அநுராதபுரம் ஜனகபுர இராணுவ முகாமுக்கு அருகாமையில் செவ்வாய்கிழமை (25) காலை இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலருக்கு காயம்.
இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸும் ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்காக செல்லும் ஊழியர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸும் அநுராதபுரம் ஜனகபுர இராணுவ முகாமுக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் இதன்போது பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ் விபத்து சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments