Breaking News

கிராம சேவையாளரின் முயற்சி மஹ்தி பவுண்டேஷன் அனுசரணையில் மீள் எழுச்சி பெறும் கற்பிட்டி முகத்துவாரம் பாலர் பாடசாலை

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முகத்துவாரம் பாலர் பாடசாலை கடந்த 17 வருடங்களாக மூடப்படிருந்துடன் முன்னைய பாலர் பாடசாலை கட்டிடம் மற்றும் இதர விளையாட்டு உபகரணங்கள் அணைத்தும் பயன்படுத்த முடியாத  வண்ணம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.


இவ்வாறான நிலையில் கற்பிட்டி முகத்துவாரம் சிறார்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு அண்மையில் தற்காலிகமாக இணைப்பு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் எம்.பீ.எம் அர்ஷதின் தொடர் முயற்சியும் கற்பிட்டி உதவி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினியின் ஆதரவும்  மஹ்தி பவுண்டேஷன் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் அனுசரணையும் ரிஸ்னி மோட்டர்ஸ உரிமையாளர் சகோதரர் ரஸீம் அவர்களின் உதவியுடன் முகத்துவாரம் பாலர் பாடசாலை 17 வருடங்களின் பின் மீள் எழுச்சி பெற உள்ளது.


அதன் அடிப்படையில் கற்பிட்டி முகத்துவாரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு மஹ்தி பவுண்டேஷன் அனுசரணையில் சீருடை, புத்தக பை, மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (27) கிராம உத்தியோகத்தர் எம்.பீ.எம் அர்ஷத் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மஹ்தி பவுண்டேஷன் நிறைவேற்று பணிப்பாளர் ஏ ஆர்.எம் முஸம்மில், கற்பிட்டி தில்லையூர் மீனவ சங்கத் தலைவரும் மஹ்தி பவுண்டேஷன் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.பீ எம் சபுறுல்லாஹ்கான், முகத்துவாரம் சமூர்த்தி சங்கத்தின் தலைவர் யூ.ஜகத் வசந்த குமார், முகத்துவாரம் பாலர் பாடசாலையின் ஆசிரியை எம்.ஆர்.எப் நுஸ்ரா மற்றும் சமூக ஆர்வலர்களான எம்.ஐ.எம் ரபீக், ஜே.எம் நளீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


17 வருடங்களின் பின்னர் முஹத்துவாரத்நில்பாலர் பாடசாலையை உயிர் பெற வைத்துள்ள கிராம உத்தியோகத்தர் எம்.பீ.எம் அர்ஷதுக்கு  முஹத்துவார பெற்றோர்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















No comments