அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக புத்தளம் கொழும்பு முகத்திடலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்.
எம்.யூ.எம்.சனூன் எம்.எச்.எம்.சியாஜ்
அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக புத்தளம் கொழும்பு முகத்திடலை சுத்தப்படுத்தி அழகு படுத்துகின்ற வேலை திட்டம் வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றது.
புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு புத்தளம் பொலிஸ் நிலையத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு உள்ளிட்ட முப்படை, புத்தளம் நகர சபை, புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சங்கம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கி இருந்தன.
புத்தளம் கொழும்பு முகத்திடலை சுத்தப்படுத்துவதில் முப்படையினர் மற்றும் நகர சபை ஊழியர்களும் இணைந்திருந்தனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி குணதிலக்க, புத்தளம் நகர சபையின் செயலாளர் கீதானி ப்ரீதிகா, நகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி, புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சங்க தலைவர் வை.எம்.நிஸ்தார் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
No comments