உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா.
எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தினை முஸ்லிம் ஹேன்ட்ஸ் நிறுவனம் வழங்கி வைத்துள்ளது.
க.பொ.த. உயர் தரம் வரை 1100 மாணவர்கள் கற்கின்ற இந்த பாடசாலைக்கு ஆறு வகுப்பறைகளைக் கொண்ட மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல்லினை முஸ்லிம் ஹேன்ட்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் முஹம்மது மிஹ்லார் நாட்டி வைத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் பி.எம்.எம் நளீம் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை உளுக்காப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள சகல நிறுவனங்களையும் உள்ளடக்கிய கூட்டுறவுச் சங்கம் முன்னின்று நடாத்தியது.
கஷ்ட பிரதேச பாடசாலையான இந்த உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு கட்டடமொன்றினை வழங்கி வைத்தமைக்காக முஸ்லிம் ஹேன்ட்ஸ் நிறுவனத்திற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.சியாத் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
No comments