புத்தளம் தில்லையடி அல் அக்ஸா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பும்
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
புத்தளம் தில்லையடி அல் அக்ஸா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) அல் அக்ஸா பாலர் பாடசாலையின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் அதிதிகளாக தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி பர்ஜானா, முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர், முன்னாள் அல் அக்ஸா பாலர் பாடசாலையின் தலைவர் ஜெமீன், தில்லையடி அல் அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் முஜாஹித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறார்களின் கலைத் திறமைகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்தும் வகையில் இடம்பெற்ற இக் கலை விழாவில் கலந்து கொண்ட சகல பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்விற்கு சிறார்களை பெற்றோர்களின் பங்களிப்புடன் தயார் படுத்திய பாலர் பாடசாலை ஆசிரியர்களான முசைனா மற்றும் றிஸ்லா ஆகியோருக்கு நிர்வாக் குழு சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக உறுப்பினர் இஷாம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments