Breaking News

கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இரு மாணவர்கள் சித்தி

(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)

இம்முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களான  மொஹமட்  மில்ஹான் மொஹமட்  மிஹ்ரான்   157 புள்ளிகளையும் மொஹமட் நசீர் மொஹமட்  நப்லான் 138 புள்ளிகளையும் பெற்று இருவர்  சித்தியடைந்துள்ளனர்.


பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 26  மாணவர்களில் இருவர் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 60 வீதமானவர்கள் 70 புள்ளிகளுக்கு பெற்றுள்ளனர். இம் மாணவர்களுக்கும் கல்வி புகட்டிய ஆசிரியர்களான எம். பீ.றைஹானா மற்றும் என்.கே நசீரா ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாக் குழு மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் எம்.எம்.எம்  நவ்ப் தெரிவித்துள்ளார்.







No comments

note