Breaking News

புத்தளம் - உடப்பில் தேர் உற்சவம்

 (க.மகாதேவன்)

வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தளம் உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தில் வெள்ளிக்கிழமை (10) தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.


கடந்த 2ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்விழாவில் 12நாட்கள் திருவிழா இடம்பெறுவது முக்கியமானதாகும். வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 3மணிக்கு ஸ்நபன அபிஷேகம், விஷேட பூஜை அத்துடன் அதிகாலை 5 மணிக்கு சுவர்க்கவாயில் தரிசனம் காலை 8.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து இரதத்தில் எழுந்தருளும் காட்சி இடம்பெறும்.


இதன் போது பக்தர்கள் தமது அர்ச்சணைத் தட்டுக்களை அம்பாளுக்கு வழங்குவார்கள். அத்துடன் இரதம் ஆலய வெளிவீதி வலம் வந்த பிற்பாடு, பூஜை இடம்பெற்று பச்சை சாத்துதல், பிராயசித்த அபிஷேகம், அன்னதானம் இடம்பெறும். மாலை ஏழு மணிக்கு வாமன உற்சவம் இடம்பெறவுள்ளது.





No comments

note