Breaking News

அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் ஆண்டிமுனை த.ம.வி. ஆசிரியர்கள் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்

 (உடப்பு க.மகாதேவன்)

அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி (2024). நாடகப் போட்டியில் வடமேல் மாகாண, புத்தளம்  மாவட்டத்தின் பு/ஆண்டி முனை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி வதனஸ்ரீ கர்ணாகரன் அவர்களின் இயக்கத்தில் உருவான " வள்ளண்மை மிக்க வரையா மாரி பேகன்" என்ற நாடகம் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாம் நிலையைப் பெற்றுக் கொண்டது. 


இதேவேளை அந்நாடகத்துக்கான சிறந்த நடிகருக்கான "யூரி விசேட விருது" திரு.சம்மாட்டி கர்ணாகரன் அவர்களுக்கும், ( பு/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்) "சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது" திருமதி குணசேகரம் சம்வர்தினி (பு /ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம்) ஆசிரியைக்கும், பங்கு பற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும்  நேற்று (2024/12/13) அலரிமாளிகையில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.








No comments

note