புத்தளம் கண்டகுழி பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய கடலாமை.
(உடப்பு க.மகாதேவன்)
புத்தளம் கண்டகுழி பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய கடலாமைகளை உயிருடன் மீட்டு மீண்டும் பாதுகாப்பாக கடலுலில் விடுவிக்கப்பட்டன.
புத்தளம் கற்பிட்டி கண்டக்குழி பகுதியில் (20) மாலை மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு கடலாமைகள் சிக்கியுள்ளன. இதனையடுத்து குறித்த கடலாமையை உயிருடன் மீட்டு பாதுகாப்பாக கடலில் விடுவிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த கடலாமை (Olive Ridley) ஒலிவ நிறச் சிற்றாமை வகையைச் சார்ந்தது எனவும் சுமார் 50 கிலோ கிராமிற்கும் அதிக எடைக் கொண்டு காணப்பட்டதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.
No comments