புத்தளம் பொது நூலகத்தின் சிறுவர் பகுதி புணர் நிர்மானம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் பொது நூலகத்தின் சிறுவர் பிரிவு, எலைன்ஸ் பினேன்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் புணர் நிர்மானம் செய்யப்பட்டு அண்மையில் (09) உத்தியோக பூர்வமாக பிரதம நூலகர் கே.எம்.நிஷாத்திடம் கையளிக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் புத்தளம் நகர சபையின் செயலாளர் கீதானி ப்ரீத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், தளபாடம் மற்றும் ஏனைய உபகரணங்கள் எலைன்ஸ் பினேன்ஸ் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறந்த வாசகர்களுக்கான விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் பரிதா ரஜாப், எச். சந்திரிகா, பீ.எம். மதீஷா இமந்தி மற்றும் ஆர்.பி.
ருபைமான் ஆகியோர் பெற்றுக் கொண்டதோடு குறித்த நிகழ்வின் நினைவாக நூலக வளாகத்தில் மரங்களும் நடப்பட்டதுடன், வருகை தந்த வாசகர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
No comments