கற்பிட்டியில் இடம்பெற்ற காலநிலை மாற்றத்தின் தாங்குதிறனை மேம்படுத்தும் விழிப்பூட்டல் செயலமர்வும் கண்காட்சியும்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களில் காலநிலை நிதி மூலம் மற்றும் தாங்குதிறனை ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களின் குரல்களை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வுக் கண்காட்சி ஒன்று கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றஞ்சன் பியதாச, வானிலை அவதான நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரொசான் ஹேரத், சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆலோசனைக் குழுவின் தலைவர் ரஞ்சித் புண்ணியவர்தன மற்றும் இந் நிகழ்ச்சி இணைப்பாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சாமினி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி விழிப்பூட்டல் கண்காட்சியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கான பத்து கருப்பொருள்களாக பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்நுட்பத்தின் மூலம் கற்பிட்டி சுற்றுலா துறையை மாற்றி அமைத்தல் , கல்பிட்டியில் பெண்கள் நிதி அதிகாரமளித்தல் மூலம் காலநிலை சவால்களை எதிர்கொள்கின்றனர், காலநிலை நிதி மூலம் பெண்கள் தலைமையிலான சேதன விவசாயத்தில் தாங்கு திறனை உருவாக்குதல், பெண்கள் தொடர்பான கைவினைப் பொருட்கள் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தல், பெண்கள் தொடர்பான இயற்கை அடிப்படையிலான தீர்வு நடவடிக்கைகள் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை வழி நடத்துகின்றன , பெண்கள் தலைமையிலான கால்நடை பராமரிப்புக்கான நெகிழ்த்திறன் கொண்ட பண்ணை நடைமுறைகள், உலர் மீன் உற்பத்தி பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள், பெண்கள் தொடர்பான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை வழி நடத்துகிறது , நிலைபெறான மலர் வளர்ப்பு கல்பிட்டியில் நீர் முகாமைத்துவ மூலம் பெண்களை வலுவூட்டல், பெண்கள் முன்னணி சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தொடர்பான சில்லறை கடை (சொந்த உற்பத்தி மற்றும் விநியோகம்) என்பன வழங்கப்பட்டு அதற்கு அமைவாக வரையப்பட்ட சித்திரங்களின் காண்காட்சியும் அதற்கான செயலமர்வு தெளிவூட்டல்கள் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments