வியட்நாமில் இடம்பெற்ற சர்வதேச டேக்வொண்டோ போட்டியில் இலங்கையில் இருந்து முதலாவது முஸ்லிம் மாணவி சாதனை.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
வியட்நாமில் நடைபெற்ற "2024 ஆசிய போலீஸ் டேக்வொண்டோ" சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையின்
புத்தளம் நகரை சேர்ந்த ராசிக் பரீத் மஸ்யத் ஸாரா எனும் மாணவி sparring Junior 355 கி.கி. எடைப்பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் poomsae Junior 2 பிரிவில் வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்து இலங்கை நாட்டுக்கும் தனது புத்தளம் மண்ணுக்கும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளார்.
உலக போலீஸ் டேக்வொண்டோ சம்மேளனத்தினால் "வியட்நாம் 2024 ஆசிய போலீஸ் டேக்வொண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள்" அண்மையில் வியட்நாமின் ஹாலோங் நகரில் இடம் பெற்றது.
29 நாடுகள் பங்கு பற்றிய இப்போட்டியில் இம்மாணவி புத்தளம் கே.கே.டி. கழகத்தினை பிரதிநிதித்துவப் படுத்தி இப்போட்டியில் பங்கேற்றிருந்தார்.
இவர் மதுரங்குளி எக்ஸலன்ஸ் பாடசாலையின் மாணவியும், புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.
இம்மாணவி புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெரு மர்ஹூம் ராசிக் பரீத் மற்றும் பாயிஸா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியாவார்.
No comments