சிரியாவை கைப்பற்றிய போராளிகள் அமெரிக்கா, இஸ்ரேலின் கைக்கூலிகள் என்ற விமர்சனம்.
அநீதியிளைக்கப்பட்ட ஒரு சமூகம் அல்லது இனம் விடுதலைக்காக போரிடுவதற்கு தங்களது விடுதலை அமைப்பை பலமுள்ள இராணுவ இயக்கமாக கட்டியமைப்பதென்றால் சக்தியுள்ள நாடுகளின் உதவிகள் தவிர்க்கமுடியாதது.
அவ்வாறு சக்தியுள்ள நாடுகளை ஆரம்பத்தில் பகைத்துக்கொண்டால் தங்களை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவார்கள். அவ்வாறு நடைபெற்றால் இலட்சியத்தை அடைய முடியாது.
அந்தவகையில் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளை விரட்டியடிக்கும் நோக்கில் முஜாஹிதீன் போராட்ட இயக்கத்தை கட்டியமைப்பதற்காக அமெரிக்காவின் உதவியை ஒசாமா பெற்றார்.
ஆனால் இயக்கத்தை கட்டியமைத்த பின்பு ஒசாமாவும், அல்-கொய்தா இயக்கமும் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்கவில்லை. இஸ்லாமிய உலகை அடிமைப்படுத்தி வளங்களை சுரண்டி இஸ்ரேலை பாதுகாத்து வருகின்ற அமெரிக்காவை எதிர்த்து உலகம் முழுவதும் போர் புரிந்து வருகின்றனர்.
அதுபோல் தமிழீழ போராட்டத்துக்கான இயக்கத்தை கட்டியமைப்பதற்கு இந்தியாவின் உதவியினை பெற்று தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டியமைத்தனர். ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு அடிமையாக இருக்கவில்லை. மாறாக புலிகளை அடிமைப்படுத்த முற்பட்டபோது இந்தியாவுக்கு எதிராக போர் புரிந்தனர்.
இவ்வாறு உலக வரலாற்றில் லட்சியத்துக்காக போர் புரிந்த ஏராளமான இயக்கங்கள் தங்களது இயக்கத்தின் தேவைக்காக பலமுள்ள நாடுகளை பயன்படுத்தியுள்ளனரே தவிர, உதவிய நாடுகளுக்கு அடிபணிந்து தங்களது நோக்கத்தை கைவிட்டதில்லை.
சிரியாவில் பசர் அல்-அசாத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக போரிட்ட போராளிகளை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் கைக்கூலிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். இதில் பின்னிக்கிடக்கின்ற அரசியல் சிக்கல்கள் பற்றியும், போராளிகள் பற்றியும் ஆழமாக அறிந்துகொள்ளாமல் கூறப்படுகின்ற இவ்வாறான விமர்சனங்களை விரைவில் அவர்களே உணர்ந்துகொள்வர்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments