Breaking News

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவுதின துஆ பிராத்தனை

மாளிகைக்காடு செய்தியாளர் 

கடந்த 2004 உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குரான் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் ஏற்பாட்டில் பள்ளிவாசலின் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றது.


சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் உலமாக்கள், மாளிகைக்காடு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், ஆலோசகர் ஐ. இஸ்திகார் உட்பட நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.













No comments

note