பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான "உளவள ஆலோசனையும், வழிகாட்டலும்" தொடர்பான செயலமர்வு!.
புத்தளம் - தெற்கு கோடத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் தரம் 9,10,11 ஆகிய மாணவர்களுக்கான உளவள ஆலோசனையும், வழிகாட்டலும் தொடர்பான செயலமர்வு இன்று (13) வெள்ளிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வை மாணவர்களுக்கு அஷ்ஷெய்க் ஸஹீல் ஜலீல் அவர்களும் மாணவிகளுக்கு மௌலவியா ஐனுல் அஸ்லிஹா அதீப் (இஸ்லாஹி) அவர்களும் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது.
KMCC (NS) MEDIA UNIT
No comments