ஜும்ஆ தினங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களை நடாத்துவதை தவிர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஜும்ஆ தினங்களில் நடாத்துவதில்லை என்று தான் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக பதவி வகித்த காலத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று ஜும்ஆ தினத்தில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது குறித்து தனது கண்டனத்தை அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை(J.P) தெரிவித்தார்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இன்று நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் உதுமாலெப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
ஜும்ஆ தினத்தில் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் திணைக்களத் தலைவர்களும் பல கஷ்டங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதுடன் எதிர் காலங்களில் ஜும்ஆ தினங்களில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்கள் நடாத்துவதை தவிர்க்குமாறு வேண்டிக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் திரு வசந்த பியதிஸ்ஸ, மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம ஆகியோர் எதிர்வரும் காலங்களில் வெள்ளிக்கிழமை தினங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடாத்தப்படுவதை தவிர்த்துக் கொள்வதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு தாங்கள் மனம் வருந்துவதாகவும் தெரிவித்தார்கள்.
No comments