மர்யம் மகளிர் அரபுக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா - 2024
புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு என்.எம். ஹபீல் (கபூரி,JP)
புத்தளம் மாவட்டம் பத்துளுஓயா எனும் முகவரியில் அமைந்துள்ள மர்யம் மகளிர் அரபுக் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 04:30 மணியளவில் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.சீ.எம். நாஸிர் (ரஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி விழாவில் விஷேட பேச்சாளராக புத்தளம் தில்லையடி பாகியாதுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் மிஸ்பாஹ் உஸ்வி (உஸ்வதுல் ஹஸனா) அவர்கள் விஷேட உரை நிகழ்த்தினார்கள் .
மற்றும் இவ்விழாவில் 09 ஆலிமாக்களும் 04 ஹாபிழாக்களும் பட்டம் பெற்று வெளியாகினார்கள். இவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள், பதக்கங்கள், பரிசில்கள் வழங்கப்பட்டன.
இக்கல்லூரி ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்போடு பயணிக்கின்ற ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரியின் ஸ்தாபகராக கொழும்பைச் சேர்ந்த தனவந்தர் Dr. ரஸீன் அன்வர் அவர்களுடன் இணைந்து சிறந்த நிர்வாகம் நடைபெறுகின்றது.
அதே போன்று இக்கல்லூரியிலிருந்து இது வரை 161 ஆலிமாக்கலும், 50 ஹாபிழாக்களும் பட்டம் பெற்று வெளியாகி உள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்க விடயமாகும்.
இவ்விழாவில் ஊர் மக்கள்,பெற்றோர்கள், உஸ்தாத்மார்கள், உலமாக்கள், நலன் விரும்பிகள் என அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.











No comments