"மாவீரர் தினம்" தெற்கின் விமர்சனத்திலிருந்து தப்பிய NPP அரசு
மழை, வெள்ளம், சூறாவளி பற்றிய அச்சுருத்தலில் மக்கள் இருந்த நிலையில், வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் எந்தவித தடையிமின்றி மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் விமர்சயாக நடைபெற்றுள்ளது.
நவம்பர் 26, 27 ஆகிய தினங்கள் விடுதலை புலிகள் இயக்க தலைவரின் பிறந்தநாள் மற்றும் போரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் தினமாகும்.
யுத்தம் முடிவுற்றதன் பின்பு கடந்த ஆட்சிகாலங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதை பாதுகாப்பு படையினர் தடைசெய்து அல்லது இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர்.
மாவீரர்கள் பற்றிய வலி JVP க்கு நன்றாகவே உள்ளது. தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூறாமல் மாவீரர்களை மாத்திரம் நினைவுகூறுங்கள் என்று அறிவித்திருந்தாலும் இதை சிங்கள மக்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்.
கடந்த தேர்தலில் அதிகமான தமிழர்கள் NPP க்கு வாக்களித்திருந்தனர். அவ்வாறான நிலையில் மாவீரர்தினம் அனுஷ்டிப்பதை அரசு தடை செய்தால் அது தமிழர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதேநேரம் அனுமதித்தால் தெற்கின் சிங்கள பகுதிகளில் விமர்சனத்தை உண்டுபன்னும்.
இவ்வாறான தர்மசங்கடமான நிலையில் இருந்தபோது இயற்கை அனர்த்த ஆச்சுருத்தலில் நாட்டு மக்கள் அனைவரது கவனமும் இருந்த நிலையில் சத்தமின்றி மாவீரர் தினம் அனுசுடிக்கப்பட்டுள்ளது.
இதனால் NPP அரசு விமர்சனத்திலிருந்து தப்பிக்கொண்டது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments