Breaking News

அக்கரைப்பற்று உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடலும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் கௌரவிப்பும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

அக்கரைப்பற்று உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல் நிகழ்வு அ இ ஜ உலமா புத்தளம் மாவட்டம் அக்கரைப்பற்று கிளையினால் (22) வெள்ளிக்கிழமை மாலை மதுரங்குளி ட்ரீம் ஹோலில் பி.ப 06.40 மணியளவில் அஷ்ஷெய்க் ஏ.எம் அஹ்ஸன்(ஸலாஹி)யின் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.


அக்கரைப்பற்று கிளை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம் எம் எம் மிஹ்ழார் (நளீமி) அவர்களினால் தலைமை உரையும், வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. அவர் தனது உரையில் ஜம்இய்யாவினால் அடைய வேண்டிய இலக்குகள்,மற்றும் ஜம்இய்யாவினால் செய்யப் பட்ட சேவைகள், மற்றும் உலமாக்களின் பங்களிப்பு எவ்வளவு தேவை என்ற விடயங்கள் பற்றி தெளிவு படுத்தி உரையாற்றினார்.


தொடர்ந்து செயளாலர் அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஏ .முஜீபுர் ரஹ்மான் (மனாரி) யினால்  இந்த ஒன்று கூடலின் நோக்கம் ஜம்இய்யாவின் அங்கத்துவத்தை அதிகரிப்பது, உலமாக்களுக்கு மத்தியில் அறிமுகத்தை உருவாக்கிக் கொள்வது பற்றியும், உப குழுக்களின் செயற்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.


தொடர்ந்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே.எம். பைசல் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. அந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம் எம் எம் மிஹ்ழார் (நளிமி), அஷ்ஷெய்க் எம்.ஏ.எல். எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி), அஷ்ஷெய்க் எம்.ஜே அப்துல் லத்தீப் (மதனி), அஷ்ஷெய்க் இஸட்.ஏ. சன்ஹீர் ( கபூரி) ஆகியோரால் அ இ ஜ உலமா அக்கரைப்பற்று கிளை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே எம் பைசல் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.








No comments

note