Breaking News

பள்ளிவாசல்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டி அழகு படுத்தும் வேலைத்திட்டம்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

கல்பிட்டி வீதி பள்ளிவாசல்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டி அழகு படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த அழகு படுத்தும் வேலைத்திட்டமானது தேசிய மக்கள் சக்தியின் பள்ளிவாசல்துறை கிளை உறுப்பினர்களால் திங்கட்கிழமை காலை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம். நஜுப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க, பள்ளிவாசல்துறை கிராம சேவையாளர் ரினூஷா, பள்ளிவாசல்துறை மு.ம.வி. அதிபர் ரிஸ்கான், பள்ளிவாசல்துறை அல் கரம் ஆரம்ப பாடசாலை அதிபர் ஆர். இர்பான், பள்ளிவாசல்துறை நூலகப் பொறுப்பாளர் ஜே.எம். பாரிஸ், தேசிய மக்கள் சக்தியின் கற்பிட்டி பிரதேச நிர்வாக செயலாளர் எம். இபாம், உப  தலைவர் அல் ஹாஜ் நயீம் உட்பட ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அதிகமான பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.



















No comments

note