விமர்சிப்பதில் உள்ள பாரபட்சம்
முஸ்லிம், தமிழ் ஆகிய சிறுபான்மை தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்கள். கேள்வி எழுப்புகின்றார்கள், தங்கள் சமூகம் சார்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். இதனை நாங்கள் ஊடகங்கள் மூலமாக பார்க்கின்றோம்.
ஆனால் சிறுபான்மை தலைவர்களது கோரிக்கைகள் பெரும்பாலும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படுவதில்லை. அவ்வாறு நிறைவேற்றப்படாவிட்டால், அது யாருடைய குற்றம் ?
சிறுபான்மை தலைவர்கள் மீது குற்றம் சுமத்துவதா ? அல்லது ஆட்சியாளர்கள்மீது குற்றம் சுமத்துவதா ?
பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து எதுவும் உரையாற்றாமல் கதிரையை சூடாக்குகின்றவர்களை கேலி செய்கிறோம்.
அதேநேரம், உரையாற்றுபவர்களை பார்த்து “அங்கு கத்தத்தான் தெரியும். கத்துவதனால் எந்தவித பிரயோசனமும் இல்லை” என்று விமர்சிக்கின்றோம்.
ஆனால் இந்த விடையத்தில் எமது குரல்களை செவிமடுக்காமல் இருக்கின்ற ஆட்சியாளர்கள்மீது ஒருபோதும் குற்றம் சுமத்துவதில்லை. அது ஏன் என்று புரியவில்லை.
முகம்மத் இக்பால்
No comments