பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி பட்டறை
(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
கற்பிடி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் கற்பிட்டி பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுயதொழிலை மேற்க்கொள்ளும் பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு இரண்டு நாள் பயிற்சி பட்டறை கடந்த 31 ம் மற்றும் 01 ம் திகதிகளில் கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி பட்டறையில் தேங்காய் பாலில் செய்யக்கூடிய அரிய வகை. உணவு பண்டங்களுக்கான தேங்காய் கேக். தேங்காய் பால் டொபி, தேங்காய் ஐஸ்கிரீம், தேங்காய் புடிங்,.மற்றும் தேங்காய் டொபி
போன்ற உணவுப் பண்டங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இதற்கு வளவாளர்களாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி சந்தன ரத்நாயக, கள உத்தியோகத்தர் அனுருந்த சுவர்வீர, மற்றும் சாந்தி மெனிகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சி பட்டறையின் பிரதான நோக்கங்களாக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் புதிய வகையான உணவுகளை அறிமுகப்படுத்தல் ஆகும் என கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தி நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முனாஸ் தெரிவித்தார்.
No comments