Breaking News

தலையை தடவி கண்ணை பிடுங்கும் சிஸ்டம் சேஞ்

அக்குரனையில் முஸ்லிம் இளைஞர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜித ஹேரத்தின் அதிகார தொனியிலான பதில்கள் ஆரோக்கியமானதல்ல.   

 

இத்துப்போன பழைய ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதியவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்தை சுத்தம் செய்வோமென்று தேர்தலுக்கு முன்பு மக்களை சூடேத்தினார்கள்.  


ஆனால் தேர்தலுக்கு பின்பு அவர்கள் கூறியதுபோன்று தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மாத்திரம் தகுதி இல்லையென்றும் அனுபவம் போதாது என்றும் கூறுகிறார்கள். 


இவர்களது கொள்கைகள் ஒன்றுடன் ஒன்று முற்றிலும் முரண்பாடாக உள்ளது.  


முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மாத்திரம்தான் அனுபவம் தேவையா ? அப்படியென்றால் ஏனைய உறுப்பினர்களுக்கு அனுபவம் தேவையில்லையா ? அனுபவம் இல்லாதவர்களை ஏன் வேட்பாளராக நியமித்தார்கள் ? 


தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் அமைச்சர்களாக பதவிவகித்த அனுபவம் உள்ளவர்களா ?


பாராளுமன்ற வாசற்படியை மிதிக்காத பெரும்பான்மை இனத்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் ஆனால் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மாத்திரம் அனுபவம் தேவை. இதுதான் சமத்துவம், இதுதான் இவர்களுடைய சிஸ்டம் சேஞ் என்பது புரிகிறது.   


தங்களது ஏமாற்றுக்களை ஏனைய சமூகத்தவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பதாவது இவர்களுக்கு விளங்கவில்லையா ? 


இவர்கள் கூறிய சிஸ்டம் சேஞ்ச் என்னும் சமத்துவம் இதுதானா ? 


சிங்கள வாக்குகளை கவர்வதற்காக முஸ்லிம் விரோதியாக காண்பித்தாலும் அமைச்சரவையிலும், அமைச்சின் செயலாளர் பதவிகளிலும் கோத்தபாய ராஜபக்ச முஸ்லிம் பிரதிநிதிகளை நியமித்தார். 


ஆனால் NPP யினர் முஸ்லிம்களின் நண்பர் என்றும், சமத்துவம், இனவாதம் இல்லாத நாடு என்று கூறிக்கொண்டு அமைச்சர் பதவியிலும், அமைச்சின் செயலாளர் பதவிகளிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்படாமையானது தலையை தடவி கண்ணை பிடுங்குவதற்கு ஒப்பானதாகும். 


எனவேதான் கோத்தாவைவிட இவர்கள் ஆபத்தானவர்கள் என்பது புரிகின்றது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note